இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் அலுவலக உபகரணங்கள் வழங்கிவைப்பு

0
221

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

8b186541-7615-4bf1-96e9-46c7701ab1b22016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சங்கங்கள், பொது நிறுவனங்கள், கழகங்கள், மதஸ்தலங்களுக்கு உட்பட 12 சமூகநல அமைப்புக்களுக்கு அலுவலக உபகரணங்கள் வெள்ளிக்கிழமை (ஜுலை 15, 2016) வழங்கி வைக்கப்பட்டன.

கணினிகள், மின் பிறப்பாக்கி, படப்பிரதி இயந்திரம், கதிரைகள் உட்பட அலுவலக உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது ஒதுக்கீட்டிலிருந்து ஏறாவூருக்கு வழங்கிய 11 இலட்சத்து 50 ஆயிரம் (11,50,000.00) ரூபாவைக் கொண்டு இந்த அலுவலக உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஸா தலைமையில் இடம்பெற்ற மேற்படி அலுவலக உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

760b5c35-8064-4581-8a5e-92d5ef2857ec

f2874d67-75a0-4189-8427-808c774b1917

LEAVE A REPLY