(Photos) மண்முனைப் பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகத்தின் பெயர்ப்பலகை திறந்து ஒரு வாரத்தில் உடைத்து நாசம்

0
42

(விஷேட நிருபர்)

DSCN7497மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தின் பெயர்ப்பலகை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலக அதிகாரிகள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (15) வெள்ளிக்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம் பெற்றிருக்கலாமமென சந்தேகிக்கப்படுகின்றது.

மண்முனைப் பற்று பிரதேச செயலக பெயர்ப்பலகை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதை இன்று காலை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கடமைக்கு வந்த போது அவதானித்துள்ளனர்.

இதையடுத்து இது தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காத்தான்குடி பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள இப்பிரதேச செயலகத்திற்கு முன்னாள் கடந்த வாரமே இப்பெயர்ப்பலகை நிர்மானிக்கப்பட்டு திறக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.

DSCN7498 DSCN7500 DSCN7502

LEAVE A REPLY