இன­வாத செயல்­க­ளை கட்­டுப்­­ப­டுத்த வேண்­டும்: அர­சாங்­கத்­திடம் தேசிய ஷூரா சபை கோரிக்­கை

0
186

NSC Shooraமுஸ்­லிம்­க­ளது மனதைப் புண்­ப­டுத்தும் விஷமப் பிர­சா­ரங்­களும் சிறு­பான்மை இனத்­த­வர்கள் மற்றும் மதங்­க­ளுக்­கெ­தி­ரான இன­வாத மத­வாத செயற்­பா­டு­களும் மீண்டும் அதி­க­ரித்து வரும் சூழலில் நாட்டின் சகல குடி­மக்­களும் சாந்தி சமா­தா­னத்­துடன் வாழும் ஒரு சூழலை உரு­வாக்­கு­கின்ற அதனை ஊர்­ஜி­தப்­ப­டுத்தும் பொறுப்பு அர­சாங்­கத்­துக்கு இருக்­கி­றது என தேசிய ஷூரா சபை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

தேசிய ஷுரா சபையின் அங்­கத்­துவ அமைப்­பு­க­ளு­ட­னான விஷேட சந்­திப்பு கடந்த திங்கட் கிழமை இடம்­பெற்­ற­போதே இந்த விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.

இதன்­போது நாட்டில் நிலவும் தற்­போ­தைய சூழ்­நி­லையை கருத்திற் கொண்டு சில தீர்­மா­னங்­களும் எடுக்­கப்­பட்­டன. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

அர­சியல் யாப்பில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருப்­பது போல அர­சாங்­கமும் நீதி மற்றும் சட்­டத்தை நிலை­நாட்டும் பொறுப்பை ஏற்­றுள்ள பொலிஸ் போன்ற அரச நிறு­வ­னங்­களும் நாட்டின் சகல பிர­ஜை­க­ளி­னதும் அடிப்­படை உரி­மை­களைப் பேணிப் பாது­காக்க வேண்டும். மேலும் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை நாட்டும் விட­யத்தில் எவ்­வித அச்­சமோ பார­பட்­சமோ இல்­லாமல் நடந்து கொள்­வதும் அவ­சி­ய­மாகும்.

இது தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிரி­சேன, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க, முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், பாது­காப்பு செய­லாளர் மேலும் அதி­க­ரித்து வரும் இன மற்றும் மத விரோத சக்­தி­களின் முயற்­சி­களை முறி­ய­டிக்க பாடு­பட்டு வரும் தன்­னார்வக் குழுக்கள் போன்­றோரை சந்­தித்து அதி­க­ரித்­து­வரும் இன­வாதம் மற்றும் மத­ரீ­தி­யான வன்­மு­றைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு தேசிய ஷூரா சபை தீர்­மா­னித்­துள்­ளது.

தற்­கா­லத்தில் தலை­தூக்­கி­யி­ருக்கும் பண்­பா­டற்ற இன­வாத செயற்­பா­டு­களின் பின்­ன­ணியில் மறை­வான ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்­கலாம் என தேசிய ஷூரா சபை கரு­து­வ­துடன் அவற்றின் மூலம் அர­சாங்­கத்தை ஆட்­டங்­காணச் செய்து, தேசத்தின் பொரு­ளா­தா­ரத்தை சீர்­கு­லைத்து நாட்டை மீண்டும் அரா­ஜக நிலைக்கு கொண்­டு­வரும் நோக்­கமும் அதற்குள் அடங்­கி­யி­ருக்­கலாம் என தேசிய ஷூரா சபை சந்­தே­கிக்­கின்­றது.

இதே­வேளை ஊடக தர்­மத்தைப் பேணிக்­கொள்­வ­திலும் அதற்­கான ஒழுக்க விழு­மி­யங்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து நடந்து கொள்­வ­திலும் சகல வகை­யான ஊட­கங்­க­ளுக்கும் அதி­முக்­கிய பங்கு உண்டு எனவும் தேசிய ஷூரா சபை நம்­பு­கின்­றது.

இதே­வேளை சிங்­கள சமூ­கத்­தி­லுள்ள ஒரு சில­ரது மோச­மான நட­வ­டிக்­கை­களைப் பொறுத்­த­வ­ரையில் பண்­பா­டான மரி­யா­தைக்­கு­ரிய பெரும் எண்­ணிக்­கை­யி­லான சிங்­கள மக்­களை அவை எந்­த­வ­கை­யிலும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­த­வில்லை என்­பதை ஷூரா சபை நன்கு உணர்ந்­துள்­ளது. ஒரு சில பெளத்த மத­கு­ருக்­க­ளது மோச­மான நட­வ­டிக்­கைகள் முழு பெளத்த பிக்கு சமூ­கத்­தையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­த­மாட்­டாது என்ற உண்­மை­யையும் அது விளங்­கி­வைத்­துள்­ளது.

எனவே தீய சக்­தி­களின் தூண்­டுதல் மற்றும் தந்­தி­ரங்­க­ளுக்குள் சிக்க வேண்டாம் என்றும் பொறு­மையை கடைப்­பி­டிக்கு­மாறும் விட்டுக் கொடுத்து நடக்­கு­மாறும் முஸ்­லிம்­களை தேசிய ஷூரா சபை வலி­யு­றுத்திக் கேட்டுக் கொள்­கின்­றது.

இஸ்லாம் என்­பது அமை­தி­யையும் அன்­பை­யையும் வலி­யு­றுத்தும் சாந்தி மார்க்கம் ஆகும் என்­ப­தையும் அது முஸ்­லிம்­க­ளுக்கு நினை­வூட்ட விரும்­பு­கி­றது.

இந்த அசா­தா­ரண சூழலை கையா­ளு­வ­தற்கும் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை அரசு காண்­ப­தற்கு உதவும் வகையிலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய தவறான செய்திகளையும் பிழையான கருத்துக்களையும் தெளிவுபடுத்துவதற்குமான ஒரு பிரத்தியேகமான பிரிவை அமைப்பது பற்றி தேசிய ஷூரா சபை ஆராய்ந்து வருகின்றது.

இது பரஸ்பர புரிந்துணர்வும் சமாதான சகவாழ்வும் எற்பட வழிவகுக்கும் என்றும் அதில் மேலும் சுட்­­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­து.

#Vidivelli

LEAVE A REPLY