பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ரகசியங்களை வெளியிடுவேன்: அப்ரிடி

0
169

201607141653000885_Shahid-Afridi-threatens-to-open-dark-secret-in-Pakistan_SECVPFபாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு எப்படி மோச நிலையில் உள்ளது என்பது குறித்து ஓய்வு பெற்ற பின்னர் வெளியிடுவேன் என அந்நாட்டின் டி20 கிரிக்கெட் போட்டியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

அந்நாட்டு கிரிக்கெட் நிறைய தவறுகளை கொண்டுள்ளது என்றும் வீரர்களின் தரம் சர்வதேச அளவில் சிறந்திருக்கவில்லை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அணியில் உள்ள வீரர்களை குறித்து சாடியுள்ளார் அப்ரிடி.

இது பற்றி பி.பி.சி. உருது சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அணியில் உள்ள சில வீரர்களை விட சிறந்த முறையில் விளையாடினேன் என உணர்ந்தேன். அதனால் ஐ.சி.சி. டி20 உலக கோப்பை போட்டிக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெறவில்லை. அணியில் இருந்து விலகும்பொழுது அது தகுதியுடைய ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.

நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி மோச நிலையில் உள்ளது என்பது குறித்து ஓய்வு பெற்ற பின்னர் வெளியிடுவேன் என உறுதிபட கூறிய அப்ரிடி, அதிக தகவல்களை கூற விரும்புகிறேன் என்றும் ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் உள்ள தொடர்பினால் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY