காஷ்மீர் பதற்றம்: வன்முறை சம்பவங்களில் காயம் அடைந்தோர் எண்ணிக்கை 3100 பேர்

0
94

201607142149407211_Kashmir-unrest-No-of-injured-is-3100--1500-of-them-security_SECVPFகாஷ்மீரில் வன்முறை சம்பவங்களில் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3100 என்றும் இதில் 1500 பேர் பாதுகாப்பு படையினர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க பயங்கரவாதி பர்கான் வானி சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தது. தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்டு உள்ள தகவலில் வன்முறை சம்பவங்களில் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3100 என்றும் இதில் 1500 பேர் பாதுகாப்பு படையினர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர், சிலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறப்படுகிறது. மாநிலத்தில் இதுவரையில் 244 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் 276 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும் கடந்த 5 நாட்களில் 1640 பேர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று உள்ளனர் என்றும் அரசு செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.

காயம் அடைந்தவர்களில் 134 பேர் கண்ணில் காயம் கொண்டவர்கள், அவர்களில் பலர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர். இதுபோன்ற பாதிப்பு கொண்ட சுமார் 46 பேர் மருத்துவமனையில் உள்ளனர், அவர்களுக்கு சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. சுமார் 1500 பாதுகாப்பு படையினரும் காயம் அடைந்து உள்ளனர், அவர்களுக்கும் சிகிச்சை அளித்து உள்ளோம். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது. போதுமான மருத்துவ நிபுணர்கள், டாக்டர்கள், ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் மாநில சுகாதார துறை மந்திரி பாலி பாகாத் உயர்மட்ட அதிகாரிகளிடம் நிலை குறித்து ஆலோசனை நடத்தினார். மருந்து பொருட்களின் தேவை மற்றும் இருப்பு குறித்து கேட்டறிந்தார். மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருந்துகள் அனுப்பப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். போதிய மருந்து பொருட்கள் மற்றும் இரத்தம் இருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பதற்றமான நிலையே நீடித்து வரும் நிலையில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY