(Poem) அது ஒரு கனாக்காலம்

0
17

(Mohamed Nizous)

வாங்குல வகுப்பில
தூங்கின என்று
ஆங்கில வாத்தி
மூங்கிலால் தந்ததும்

சூட்டிங் விளையாட
மீட்டிங் நடக்கையில்
மீட்டலைக் கேட்டு
போட்டு அடித்ததும்

வரலாறு பாடம்
தகராறு பண்ண
ஒருவாறு பிட்டால்
கரைகண்ட எக்ஸாமும்

கூட்டத் தெரியுமான்னு
கேட்ட வாத்திக்கு
நேற்றும் குப்பைய
கூட்டினேன் சொல்ல
காட்டுக் கத்தல்
போட்ட ‘கணக்கு’ம்

உம்முட பேரென்ன
உறுக்கிய வடக்கு
உரும்பிராய் வாத்திக்கு
உம்மாட பெயரை
உரத்துச் சொல்ல
சும்மா அதிர
சுருட்டி எடுத்ததும்

டாப்பில் பேரைக்
கூப்பிடும் போது
இல்லாத அவனுக்கும்
உள்ளேன் சொல்ல
முள்ளு நோக
நல்லாப் பட்டதும்

சோக்கால் வாத்தியை
ஈக்கில் போல் கீற
மூக்கால் அதனை
நீக்க அழித்து
வீக்கம் கண்டதும்

அடியேன் பட்டதும்
பொடியன்மார் பட்டதும்
விடியும் கனவுகளில்
விடாமல் தொடரும்.

LEAVE A REPLY