ஆசிரியர் நியமனம் வழங்கும் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரும் தனிநபர் பிரேரனை

0
77

(எம்.ஜே.எம்.சஜீத் )

996198f9-0a51-4052-bb6b-bc41b5703969(க.பொ.த) உயர் தரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் சிந்தியடைந்த 2000பேரை மத்திய அரசாங்க கல்வி அமைச்சில் இணைத்து ஆசிரியர் நியமனம் வழங்கும் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரும் தனிநபர் பிரேரனை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பையினால் மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது….

நமது நாட்டில் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிபர்த்தி செய்யும் நோக்குடன் கௌரவ பிரதம மந்திரி திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் க.பொ.த உயர்தரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் சித்தி அடைந்துள்ள 2000 பேரை மத்திய கல்வி அமைச்சில் இணைத்து அவர்களுக்கான பயிற்சியினை வழங்கி பட்டப்படிப்புகளை மேற்கொண்டு பட்டதாரிகளாக்குவதற்கான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி பட்டங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களாக பாடசாலைகளுக்கு நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

எனவே, இவ்வாசிரியர் நியமனத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், இறக்காமம், லவுகல, பதியத்தலாவ, தெஹியத்த கண்டி, மஹா ஓயா, நாவிதன் வெளி, மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு மேற்கு, திருமலை மாவட்டத்தில் சேருவலை, கந்தளாய், மூதூர், குச்சவெளி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அதி கௌரவ ஜனாதிபதி திரு மைத்திரி பால சிறிசேனா, கௌரவ பிரதம மந்திரி திரு.ரணில் விக்கிரமசிங்க மத்திய அரசாங்க கல்வி அமைச்சர் கௌரவ திரு.அகிலராஜ் காரியவசம் ஆகியோர்களிடம் கிழக்கு மாகாண சபை கோரிக்கை விடுக்க வேண்டும் என்ற தனிநபர் பிரேரனையே எதிர்வரும் 21.07.2016ம்; திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது,

LEAVE A REPLY