அதிகாரங்களையும் கிழக்கு மாகாணத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்; நிஷா பிஸ்வாலிடம் வலியுறுத்தல்: அமைச்சர் நசீர்

0
224

(சப்னி அஹமட்)

Naseer“கிழக்கு மாகணத்தில் உள்ள காணி, பொலிஸ் உட்பட அனைத்து அதிகாரங்களையும் கிழக்கு மாகாணத்தின் கீழ் கொண்டுவர வேண்டும்” என கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் இன்று (14) கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் வலியுறுத்தியதாக கிழக்கு மாகண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஒரு அங்கமாக, அரசியல் திருத்தத்தின் மூலம் அதிகாரப் பகிர்வாக கொண்டுவரப்பட்ட மாகாண சபைக்குரிய அதிகாரங்கள், குறிப்பாக கிழக்கு மாகாண சபைகளுக்கு இன்னமும் கிடைக்காதிருப்பது பலவழிகளில் அபிவிருத்திக்கு தடையாக இருக்கின்றது. இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

ஆகவே குறிப்பிட்ட அதிகாரங்களை மாகாணசபைகளுக்கே கொண்டுவருவதற்கு உடனடியாக நடவக்கை மேற்கொள்ள வேண்டும் என அவரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த இனப்பிரச்சினையின் காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளான மக்களின் மீள் குடியேற்றத்தில், ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்தோடு சுனாமி பெருவெள்ளம் வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான வாழ்வாதார திட்டங்கள் வெற்றியளிக்காத நிலை காணப்படுகின்றது என்பதையும் அமெரிக்க பிரதிநிதியிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இன்போது மாகாண சபையின் முதலமைச்சர், அமைச்சர்கள், தவிசாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல முக்கிய பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY