இலங்கையின் பொருளாதாரம் 5.5 வீதமாக வளர்ச்சி

0
307

Price-Hikeமுதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.5 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றத்தை வௌிப்பபடுத்துவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் இதே காலப்பகுதியில் 4.4 வீதமாக இருந்த பொருளாதாரம் 2016 இல் குறித்த வளர்ச்சியை கொண்டுள்ளது.

நிதி அமைச்சினால் கடந்த மாதம் 30 ஆம் திகதி வௌியிடப்பட்ட காலாண்டு நிதிக்கூற்றில் பொருளாதார வளர்ச்சி குறித்து பதிவிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டின் காலாண்டில் அதிகரித்த வருமானத்தொகை 19.5 வீதமாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பணவீக்கமும் ஒற்றை இலக்கத்தில் தளம்பலின்றி காணப்படுகின்றது.

–NF-

LEAVE A REPLY