ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஏறாவூருக்கு நிதி ஒதுக்கீடு

0
98

hizbullah aa2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுட்குட்பட்ட சங்கங்கள், பொது நிறுவனங்கள், கழகங்கள், மதஸ்தலங்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை ஏறாவூர் நகர மண்டபத்தில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஏறாவூர் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மற்றும் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY