சிரிய அகதிகள் தங்கியிருந்த முகாம் மீது வான் தாக்குதல்; 17 பேர் உயிரிழப்பு

0
84

a8934986cbca4ea882801cd4215e7724_18உள்நாட்டு மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த சிரிய அகதிகள் தங்கியிருந்த முகாமொன்றின் மீது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 17 பேர் பலியானதுடன் 40 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஜோர்தானிய எல்லையில் சிரியாவின் தென் பாலைவனத்தில் ஹடாலத் பிராந்தியத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி தாக்குதல் சிரிய அல்லது ரஷ்ய போர் விமானங்களால் நடத்தப்பட்டதா என்பது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் சிரேஷ்ட மேற்குலக இராஜதந்திரியொருவர் ராய்ட்டர் செய்தி ஸ்தாபனத்துக்கு தெரிவிக்கையில், அந்தத் தாக்குதல் ரஷ்ய போர் விமானங்களால் நடத்தப்பட்டதாக தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜோர்தானது கடந்த மாதம் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர் என நம்பப்பபடும் தற்கொலைக் குண்டுதாரியால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து சிரியாவுடனான தனது எல்லையை மூடி அகதிகளின் பிரவேசத்துக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY