நோயின் அறிகுறியை வெளிப்படுத்தும் தலைவலி

0
32

201607140843198680_Expressing-headache-symptoms_SECVPFதலைவலி மட்டும் அல்ல உடலில் எந்த வலியாக இருந்தாலும் அது உடலில் உள்ள நோயை வெளிப்படுத்தும் அறிகுறிதான். அதாவது உள் உறுப்புகளின் இயக்கம் சரியாக இயங்காத போதுதான் உடலில் பாதிப்புகள் உருவாகுகிறது. மனித உள் உறுப்புகள் சரியான முறையில் இயங்க வேண்டும். மனித உள் உறுப்புகள் அதிகமாக இயங்கினாலும், குறைவாக இயங்கினாலும் நோயை உருவாக்கும்.

எந்த உள் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறதோ எந்த உள் உறுப்பு சார்ந்த நரம்புகளின் வழியாக பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த உள் உறுப்பு சார்ந்த நரம்புகளின் வழியாக வலி ஏற்படுத்துவது தான் முதல் அறிகுறி ஆகும். இந்த வலிதான் மனிதனுக்கு நோயை முன்கூட்டியே அறிவிக்கிறது.

தலைவலி தான் என்று யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். மனம் அமைதியாக இல்லாமல் குழம்பி கொண்டிருந்தாலும், இரண்டு நாட்களுக்கு மேல் மலச்சிக்கல் இருந்தாலும், இரைப்பை சரியாக இயங்காமல் இருந்தாலும், இருதயம், நுரையீரல் பாதிப்பு இருந்தாலும், மண்ணீரல் வேகமாக இயங்கினாலும், தலைவலி வரும்.

ஒரே விஷயத்தைப் பற்றியே அடிக்கடி நினைத்து கொண்டு இருந்தாலும், அதிக டென்ஷன், சைனஸ், காது, வயிற்று கோளாறுகள் இவைகளாலும் தலைவலி வரும். தலைவலிகளிலும் சில வகை உண்டு. ஒற்றை தலைவலி (மைக்ரைன்) பசி தலைவலி, கண் பார்வை கோளாறுகளினால் தலைவலி என ஒவ்வொருக்கும் ஒரு காரணத்தினால் தலைவலி வருகிறது. ஆனால் பொதுவான காரணம் நரம்பு களின் இயக்கம் சரியாக இருக்க வேண்டும். அதாவது 72,000 நாடி நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும்.

மனித உடலில முக்கியமான இரு அமைப்புகள் உள்ளன. அவை. 1. நரம்புகள், 2. நாளமில்லா சுரப்பிகள். சுரப்பிகளை கட்டுப்படுத்தும் வல்லமை திறமை நரம்பு மண்டலத்துக்கு மட்டும்தான் உள்ளது. அதே போல் தலைவலி உள்ள போது மணிப்பூரகம் சக்கரம் மூலாதாரம் சக்கரம் சரியாக இயங்காமல் இருக்கும்.

ஒற்றைத் தலைவலி (மைக்ரைன்) உள்ள போது மணிப்பூரகம், மூலாதாரம், சகஸ்ராரம் ஆகிய மூன்று சக்கரம் சரியாக இயங்காமல் இருக்கும். தலைவலிகளில் சாதாரணமான தலைவலி என்றால் ஓய்வெடுப்பதாலும், மாத்திரை பயன்படுத்துவதாலும் சற்று உறங்குவதாலும் சரியாகி விடும்.

ஓய்வெடுத்தும், உறங்கியும் தலைவலி சரியாகவில்லை என்றால் நரம்பு மண்டல பாதைகளில் உள்ள நரம்புகளில் ரத்த ஓட்டம் என்பது சற்று வேகம் குறைவாக செல்வதாலும், மற்ற இடங்களில் தேவையான ரத்தம் செல்லாததாலும், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், இருதயம் போன்ற உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டம் இல்லாததாலும் தலைவலி ஏற்படுகிறது.

கழுத்துக்கு மேல் செல்லக்கூடிய நரம்புகளில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாவிட்டாலும் தலைவலி வரக்கூடும். பொதுவாக மனிதன் இரவில் ஆழ்ந்த தூக்கம் மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 6 மணி நேரம் தொடர்ச்சியாக தூக்கம் இருக்க வேண்டும். அபபோதுதான் மூளையின் அதிர்வலை அதற்குண்டான 3 முதல் 5 வரையான அதிர்வலையாக இருக்கும். இந்த அதிர் வலையின் காரணமாகத் தான் நாளமில்லா சுரப்பிகளும் நன்றாக செயல்பட்டு இயங்கும்.

LEAVE A REPLY