வீடுகளுக்கு இடையூராகவும், ஆபத்தாகவும் அமைந்த மின் இணைப்பு வயர்களை மாற்ற துரித நடவடிக்கை: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நிதி ஒதுக்கீடு

0
202

(முஹம்மட் பயாஸ்)

Kerny Lane CEB 2காத்தான்குடி-5, ஜாமியுள்ளாபிரின் வீதி, கேணி ஒழுங்கையில் அமைந்துள்ள மின்கம்பங்கள் சிலவற்றின் மின்னிணைப்பு வயர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பெரிதும் இடைஞ்சலாகவும் அசெளகரியமாகவும் அமைந்ததை அடுத்து, இவ்விடயம் கெளரவ மீள்குடியேற்ற புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் MLAM.ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதும் உடனடியாக இவ்விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து இவ்வீதியில் வீடுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது இடைஞ்சலாக அமைந்த இலங்கை மின்சார சபையின் மின்னிணைப்பு வயர்களை மக்களுக்கு இடைஞ்சலற்ற அல்லது பாதிப்பை ஏற்படுத்தாதவாறு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்று உடனடியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதாக அமைச்சின் இனைப்புச்செயளாலர் றுஸ்வின் முஹம்மட் தெரிவித்தார்.

இம்மின்கம்பங்களுக்கான வயர்கள் சுமார் 150 மீற்றர் நீளத்திற்கு பிளாஸ்டிக் பூச்சுகளால் நெய்யப்பட்ட எந்த விதத்திலும் மின் ஒழுக்கு ஏற்படாத தரமான மின்னிணைப்பு வயர்கள் தொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான அத்தியவசிய தேவைகளை மக்களின் தேவை உணர்ந்து உடனடியாக செயற்படுத்தி வருகின்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு அப்பகுதி மக்களினால் நன்றி நவிலல்களும் வழங்கப்பட்டது.

Kerny Lane CEB 1 WhatsApp-Image-20160714 (2) WhatsApp-Image-20160714 (3) WhatsApp-Image-20160714 (5)

LEAVE A REPLY