முஸ்லிம்கள் பயங்கரவாதிகளுமல்ல, தீவிரவாதிகளுமல்ல: மட்டக்களப்பில் முபாரக் (மதனி)

0
359

(விஷேட நிருபர், டீன் பைரூஸ்)

DSCN7457‘முஸ்லிம்கள் பயங்கரவாதிகளுமல்ல, தீவிரவாதிகளுமல்ல. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம்’ என மருதமுனை தாறுல் ஹுதா அறபுகல்லூரியின் அதிபர் கலாநிதி எம்.முபாறக் (மதனீ) தெரிவித்தார்.

மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்கள் நலன்புரி அமைப்பினால் நேற்று (12) செவ்வாய்க்கிழமை இரவு மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் ஒன்று கூடல் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்கள் நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.கலீல் ஹாஜியார் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர்,

முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்றுதான் சிலர் என்னிக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று உலகத்தில் சில இடங்களில் குண்டுகள் வெடிக்கின்றன. பயங்கரமான நிகழ்வுகள் நடக்கின்றன.

அதை பல மதங்களை சேர்ந்தவர்களும் செய்கின்றார்கள். ஆனாலும் முஸ்லிம் சமூகத்திலுள்ள சிலரும் ஜிஹாத் எனும் பெயரினால் இந்த வேலையை செய்கின்றனர்.

உதாரணமாக ஆப்கானிஸ்தானிலுள்ள அல்கயிதா எனும் அமைப்பு, அதே போன்று ஐ.எஸ்.எஸ். அமைப்பு இவைகளெல்லாம் இஸ்லாத்தின் பெயரில் தான் அவர்களுடைய நடவடிக்கையை சந்தைப்படுத்துகின்றார்கள்.

உண்மையில் இதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இஸ்லாத்தை தெளிவாக விளங்கும் போதுதான் இவர்களின் இந்த நடவடிக்கைக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது நடு நிலையான மக்களுக்கு புரியும். அப்போது அவர்களும் சேர்ந்து முஸ்லிம் சமுதாயத்தினை பாதுகாக்க முயற்சி செய்கின்றார்கள்.

DSCN7428இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், முஸ்லிம்களின் மத தலைவர்கள்; இந்த பயங்கரவாத செயல்களை கண்டிக்கின்றனர்.

செப்டம்பர் 11 அமெரிக்க உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதல் நடந்த உடனேயே இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான உலமாக்கள் அதை வண்மையாக கண்டித்தார்கள்.

அதே போன்று இந்த ஐ.எஸ்.எஸ். என்கின்ற அமைப்பை இலங்கையிலுள்ள உலமாக்களும் உலகத்திலுள்ள எல்லா உலமாக்களும் கடுiமாக கண்டிக்கின்றார்கள்.

இஸ்லாம் என்றால் என்ன வென்று புரியாமல் இவ்வாறு ஒரு சிலர் செய்கின்ற செயல்களை வைத்துப் பார்க்கின்ற போது நிச்சயமாக இஸ்லாத்தைப்பற்றிய ஒரு தப்பபிப்பிராயம் ஏற்படுகின்றது.

இவர்களின் இந்த பயங்கரவாத நடவடிக்கைக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றேன்.

அடுத்தவர் மதத்தினைபற்றி புரியாமல் இருப்பதும் சமூக ஒற்றுமையை பாதிக்கின்ற விடயமாகும். எனவே அடுத்த மதங்களைப்பற்றி புரியவேண்டும். அப்போது தவறான சிந்தனைகள் களையப்பட்டு ஒரு இறுக்கமான சமூக ஒற்றுமை மேலோங்கும்’ என்றார்.

இந்த வைபவத்தில் சமய சமூக பிரமுகர்கள், அரசியல் வாதிகள், அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் வர்த்தக சங்கங்களின் பிரமுர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

batti 2 batti DSCN7424 DSCN7425 DSCN7427

LEAVE A REPLY