புல்மோட்டை தள வைத்தியசாலை அபிவிருத்தி திறப்பு விழா

0
347

(சப்னி அஹமட்)

a2d4ac04-538a-47fa-bee0-d885b5dd55afதிருகோணமலை மாவட்ட புல்மோட்டை பிரதேச மக்களின் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த புல்மோட்டை தள வைத்தியசாலை நோயாளர் விடுதிப்பிரச்சினை எதிர்வரும் வெள்ளியன்று தீர்க்கப்படும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் இன்று (13) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை இன்று அதிக வளர்ச்சி அடைந்து வருகிறவேலை புல்மோட்டையின் தள வைத்தியசாலையின் நோயாளர் விடுதிப்பிரச்சினை நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருந்தமையால் மக்கள் பெரும் அசௌவ்கரியங்களை எதிர்நோக்குகின்றனர் இது தொடர்பில் சுகாதார அமைச்சர் நசீர் உட்பட பலர் மேற்கொண்ட தீர்மானத்திற்கமைவாகவும், நிதி ஒடுக்கீட்டிலும் கட்டி முடிக்கப்பட்ட புல்மோட்டை தள வைத்தியசாலை நோயாளர் விடுதிக்கான இரண்டு மாடி புதிய கட்டிடதிற்கான திறப்பு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22)ம் திகதி பி.ப. 3.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

மேலும் இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகணசபை உறுப்பினர் லாஹிர் முன்னாள் தவிசாளர் ஏ.பி.முபாரக் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் பிராந்திய சுகாதார பணிப்பாளர் அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY