பாசிக்குடாவில் சுற்றுலாத்துறை அமைச்சால் சமாதானம் மற்றும் நல்லிணக்க மாநாடு

0
85

(வாழைச்சேனை நிருபர்) 

b03eba7f-d900-4e00-8c3c-633645c7f400ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் மாநாடு முதன்முறையாக கிழக்கு மாகானத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடாவில் இடம் பெற்றது.

சுற்றுலா அபிவிருத்தி கிருஸ்தவ மதவிவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க (துழாn யுஅயசயவரபெய) தலைமையில் “சுற்றுலா அபிவிருத்தியில் சமாதானமும் நல்லிணக்கமும்; என்ற தலைமைபில் பாசிக்குடா அமாயா பீச் ஹோட்டலில் இடம் பெற்றதுடன் மாநாடு தொடர்பான ஜனாதிபதியின் வாழ்த்து செய்தியினை கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ வாசித்தார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகான ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், பிரதி அமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அருந்திக பெர்ணான்டோ, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன், உலக சுற்றுலா அமைப்பின் செயலாளர் தாலிப் ரிபாய் , சுற்றுலா அபிவிருத்தி கிருஸ்தவ மதவிவகார அமைச்சின் செயலாளர் ஜானக சுஹததாஸ  உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதி நிதிகள் 70க்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர்.

11.07.2016ம் திகதி இரவு ஆரம்பமான இம்மாநாடு 14.06.2016 வியாழக்கிழமை முடிவுறவுள்ளதுடன் நிகழ்வின் தலைவரும் அமைச்சருமான ஜோன் அமரதுங்கவினால் அதிதிகளுக்கு நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY