சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதி

0
77

Justice-Wigneswaranவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகவீனமுற்று நிலையில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள மாகாண சபைக்கட்டடத்தில் நடைபெற்றது. அந்த அமர்வில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மின்னஞ்சல் மூலம் தனக்கு தகவல் அனுப்பி உள்ளார் என அவைத்தலைவர் தெரவித்தார்.

முதலமைச்சர் இன்றைய அமர்வில் கலந்து கொள்ளாத காரணத்தால் , முதலமைச்சரிடம் கேட்பதற்கு என மாகாண சபை உறுப்பினர் பரம்சோதியினால் முன் வைக்கப்பட்ட 14 கேள்விகளும் அடுத்த அமர்வுக்கு அவைத்தலைவர் ஒத்திவைத்தார்.

-VK-

LEAVE A REPLY