உரிமைகளை வென்றெடுப்பதற்கு போராட்டமே வழி

0
90

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

உரிமைகளை வென்றெடுப்பதற்கு போராட்டமே வழி எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாகன ஊர்தி மட்டக்களப்பு நகரில் செவ்வாய்க்கிழமை (ஜுலை 12, 2016) உலா வந்தது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பஸ் நிலையம் மற்றும் மாநகர சந்தை சதுக்கம் போன்ற பிரதேசங்களில் ஊர்திகள் உலாவந்ததோடு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகள் கடந்து விட்டன.

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு வடக்கு கிழக்கில் 85 வீதமான வாக்குகளை மக்கள் வழங்கினார்கள். நல்லாட்சி அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டியே இவ்விழிப்புணர்வை வடக்கு கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் நடாத்தி வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

யுத்த பாதிப்புகளுக்கு இழப்பீடு கொடு, இராணுவத்தை முகாம்களுக்குள் மட்டுப்படுத்து, காணாமல் போனோரின் தகவல்கனை வெளிப்படுத்து, சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய் போன்ற வாசகங்கள் கொண்ட துண்டுப் பிரசுரங்கள் வீதிகளில் சென்றோரிடம் விநியோகிக்கப்பட்டன.

2de3bfaf-3962-41b8-9bbd-679e8095cc4c

880087b9-1263-49f7-8a90-8d15f694707c

b5edff91-3b97-41eb-af30-a4f77a618e34

b8db498c-5740-4b9c-b3ac-55628060b82b

LEAVE A REPLY