காரைதீவு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் பிரதேச கண்காட்சி

0
271

(எம்.எம்.ஜபீர்)

காரைதீவு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் ஒருவருட டிப்ளோமா தையல் பயிற்சியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பிரதேச கண்காட்சியும் இன்று (12) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கே.அருந்தவராஜா, அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.கலீலுர் ரஹ்மான், காரைதீவு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.கோகுலராஜன் உட்பட கிராம அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பயிற்சி காலத்தில் யுவதிகளினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், கைப்பணிப் பொருள் விற்பனையும் இடம்பெற்றதுடன்; ஒருவருட டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்த 30 யுவதிகளுக்கு கலந்து கொண்ட அதிதிகளினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

4f76c4b1-4645-4ed9-be63-e1abb9e65879

56ceed38-cfda-4d6d-b6bb-00a1049f75b5

90f264f8-8bba-4f4e-93e3-4baf3cfaf116

LEAVE A REPLY