விவசாயிகளுக்கும் கைத்தறி நெசவுத் தொழில் ஈடுபடுவோரின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் ரவூப் ஹக்கீம் நிதி அமைச்சர் ரவியுடன் பேச்சுவார்த்தை

0
512

(ஷபீக் ஹுஸைன்)

b379aa0c-7b88-4f2f-b7da-d050f2a93617அம்பாறை மாவட்டத்தில் கரும்புச் செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் எதிர்நோக்கும் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண்பதற்கும் குறிப்பாக, அம்பாறை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கைத்தறி நெசவுத் தொழில் ஈடுபடுவோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் நிதியமைச்சர் ரவி கருநாணயக்கவுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமிடையில் இன்று (12) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் ஹிங்குராண சீனித் தொழிற்சாலைக்கான கரும்பு உற்பத்தியில் காலாகாலமாக ஈடுபட்டுவரும் கரும்பு பயிர்செய்கையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதை அமைச்சர் ஹக்கீம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

ஹிங்குராண சீனித் தொழிற்சாலையின் முகாமைத்துவம்; இந்த கரும்புச் செய்iகாயாளர்களின் வாழ்வாதரப் பிரச்சினைகளை அசட்டை செய்து வருவது பற்றியும் அவர் கவலை வெளியிட்டார். குறிப்பாக, கரும்புச் செய்கையாளர்களுக்கு கூடிய வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படுவது பற்றியும் அதனை மீளச் செலுத்துவதில் கரும்புச் செய்கையாளர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாவது பற்றியும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

அதற்கமைய அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க, எதிர்வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ரவூப் ஹக்கீம், கைத்தொழில் வனிக அமைச்சின் உயரதிகாரிகள், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்ளும் விசேட கூட்டமொன்று நடாத்தப்பட இருக்கின்றது.

இதேவேளையில், குறிப்பாக அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் எதிர்சோக்கும் பிரச்சினைகள் பற்றியும் அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா போன்ற நாடுகளிலிருந்து சாரம், லுங்கி போன்றவை பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவதன் விளைவாக கிழக்கு மாகாணத்தில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபடும் நெசவுத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தும் அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு விளக்கமளித்தார்.

வெளிநாட்டு துணி இறக்குமதி காரணமாக கிழக்கு மாகாண கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு காணப்படவேண்டுமெனவும் அமைச்சர் ஹக்கீம் கேட்டுக்கொண்டார்.

அதற்கமைய 21ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.30மணிக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் கைத்தறி நெசவாளர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளும் முக்கிய கூட்டம் நிதியமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் எனவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY