போதை மாத்திரை வியாபாரி ஓட்டமாவடியில் சற்றுமுன் கைது

0
261

(ஓட்டமாவடி அஸ்பாக்)

IMG_9704மட்டக்களப்பு மாவட்டத்தின், வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒட்டமாவடி 3இல் வைத்து இன்று (12) மாலை 6.15 மணி அளவில் போதைவஸ்த்து மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பெயரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 10 மாத்திரைகள் உள்ளடங்கிய 16 கார்ட் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

வாழைச்சேனை பதில் நிலைப் பொருப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹேரத் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான SI மேனன், SI சிவதர்சன், PC 39379 பன்டார PC 59408 பன்டார ஆகியோரின் உதவியுடன் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

கல்குடாவில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை தடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம் என்றும் வாழைச்சேனை பதில் நிலைப் பொருப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹேரத் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களிலும் போதைப்பொருள் மொத்த வியாரிபாரிகள் வாழைச்சேனை குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் அமீர் அலியின் முயற்சியில் பிரைந்துரைச்சேனை மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களிலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_9705 IMG_9710

LEAVE A REPLY