சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டு நகரில் கையெழுத்து வேட்டை

0
202

(விஷேட நிருபர்)

DSCN7412சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு நகரில் இன்று (12) செவ்வாய்க்கிழமை கையெழுத்து வேட்டை இடம் பெற்றது.

சம உரிமை இயக்கத்தினால் இடம் பெற்ற இந்த கையெழுத்து வேட்டை மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்றது.

சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும், இராணுவத்தினை முகாம்களுக்குள் மட்டுப்படுத்தி குடியிருப்புக்களில் இருந்து முகாம்களை அகற்ற வேண்டும். காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் துரிதமான விசாரணைகளை நடாத்தி காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை அறிவிக்க வேண்டும். அவர்களுக்கான உரிய நஷ்ட ஈட்டினை வழங்க வேண்டும் என்பன போன்றவற்றினை வலியுறுத்தி இந்த கையொப்பங்கள் பெறப்பட்டன.

சம உரிமை இயக்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று பொதுமக்களின் கையொப்பங்களை பெற்று சர்வதேசத்தின் கவனத்திற்கு அனுப்பவுள்ளதுடன் காணாமல் போன கடத்தப்படவர்கள் தொடர்பாகவும் அரசியல் கைதிகள் தொடர்பாகவும் சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்கச் செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற் கொள்ளவுள்ளதாக சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரி.கிருபாகரன் தெரிவித்தார்.

இதன் போது இன்னும் ஏன் பார்த்திருக்க வேண்டும் எனும் தலைப்பிலான துண்டுப்பிரமொன்றும் சம உரிமை இயக்கத்தினால் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையில் சம உரிமை இயக்கத்தினை சேர்ந்த அதன் ஏற்பாட்டானர்களான யூட் பெர்ணான்டோ எம்.இந்திரானந்தன், முகம்மட் சாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

DSCN7394 DSCN7395 DSCN7398 DSCN7402 DSCN7415 DSCN7416

LEAVE A REPLY