கேர­ளா­வைச் சேர்ந்த 17 பேர் இலங்­கை வழி­யாக சென்று ஐ.எஸ். இல் இணை­வு

0
170

ISISஇந்­தி­யாவின் கேர­ளாவைச் சேர்ந்த நான்கு இளம்­பெண்கள் உட்­பட 17 பேர் ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்­கத்தில் சேர்ந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இவர்­களில் ஒருவர் தன்­னு­டய மனை­விக்கு அனுப்­பிய வாட்ஸ் அப் தகவல் மூலம் இந்த விஷயம் தெரி­ய­வந்­துள்­ளது என ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

மேலும், இவர்கள் அனை­வரும் கேர­ளாவின் தமி­ழக எல்­லையை ஒட்­டி­யுள்ள பகு­தி­களைச் சேர்ந்­த­வர்கள் என்­பதால், தமி­ழ­கத்தில் கண்­கா­ணிப்புப் பணிகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. கேரள மாநிலம் காசர்­கோடு மற்றும் பாலக்­காட்டை சேர்ந்த 16 பேர் கடந்த ஒரு மாதத்­திற்கு முன் திடீ­ரென மாய­மா­னார்கள்.

இவர்­களில் 4 பெண்­களும் 2 குழந்­தை­களும் உள்ளனர். இவர்கள் இலங்கை மற்றும் சவுதி அரே­பி­யாவில் உள்ள புனித தலங்­க­ளுக்கு செல்­வ­தாகக் கூறி­விட்டு சென்­றனர். இதன்­பி­றகு கடந்த ஒரு மாத­மா­கியும் இவர்­களை பற்­றிய எந்த தக­வலும் வர­வில்லை.

இந்­நி­லையில் காணாமல் போன ஹபீ­சுதீன் என்­ப­வரின் மனை­வியின் கைய­டக்கத் தொலை­பே­சிக்கு கடந்த சில தினங்­க­ளுக்கு முன் ஒரு வாட்ஸ்அப் தகவல் வந்­தது. அதில் உள்ள விவ­ரங்கள் வரு­மாறு:

நாங்கள் சொர்க்க இராஜ்­ஜி­யத்­திற்கு வந்து விட்டோம். இனி எங்­களை தேட வேண்டாம். நாங்கள் இஸ்­லா­மிய நாட்­டிற்கு வந்து விட்டோம். இங்கு நிர­ப­ரா­தி­களை அமெ­ரிக்கா கொன்று குவிக்­கி­றது. எனவே அவர்­களை பழி­வாங்­கு­வ­தற்­காக ஐஎஸ் அமைப்­புக்­காக நாங்கள் எங்­களை அர்ப்­ப­ணித்து விட்டோம்.

இது­கு­றித்து பெற்­றோ­ரிடம் கூறி புரிய வைக்க வேண்டும். அவர்­க­ளையும் ஐ.எஸ் அமைப்­பிற்கு அழைத்து கொண்டு வர­வேண்டும். இவ்­வாறு அந்த தக­வலில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இதை பார்த்து ஹபீ­சு­தீனின் மனைவி அதிர்ச்­சி­ய­டைந்தார். பின்னர் இது­கு­றித்து கண­வரின் பெற்­றோ­ரிடம் தகவல் தெரி­வித்தார். இதை­ய­டுத்து அவ­ரது பெற்றோர் காசர்­கோடு எம்பி கரு­ணா­கரன், எம்­எல்ஏ ராஜ­கோ­பாலன் ஆகி­யோ­ருக்கு தகவல் தெரி­வித்­தனர்.

இது­தொ­டர்­பாக கேரள முதல்வர் பினராய் விஜ­ய­னி­டமும் அவர்கள் புகார் தெரி­வித்­தனர். இதை­ய­டுத்து உட­ன­டி­யாக விசா­ரணை நடத்த கேரள டிஜிபி லோக்நாத் பெக்­ரா­வுக்கு முதல்வர் உத்­த­ர­விட்டார். உள­வுத்­துறை பொலிசார் நடத்­திய விசா­ர­ணையில் திடுக்­கிடும் தக­வல்கள் வெளி­யாகி உள்­ளன.

காசர்­கோடு மாவட்டம் திருக்­க­ரிப்­பூரை சேர்ந்த டாக்டர் இஜாஸ் என்­பவர் தலை­மையில் 16 பேரும் சிரி­யா­வுக்கு சென்­றி­ருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. கேர­ளாவில் இருந்து ஐஎஸ் இயக்­கத்தில் சேர்ந்­த­வர்கள், தமி­ழக எல்­லையில் உள்ள நக­ரங்­களைச் சேர்ந்­த­வர்கள்.

இதனால் தமி­ழ­கத்தில் இருந்து யாரும் ஐஎஸ் தீவி­ர­வாத இயக்­கத்தில் சேராமல் தடுக்க, கண்­கா­ணிப்பு பணிகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இணை­ய­த­ளங்­களில் பரி­மா­றப்­படும் தக­வல்­களை காவல் துறை­யினர் தீவி­ர­மாக ஆராய்ந்து வரு­கின்­றனர்.

சிரி­யா­வுக்கு சென்­றுள்ள குழுவில் டாக்டர் இஜாஸ், அவ­ரது மனைவி ரிபைலா, ஷிகாஸ் அவ­ரது மனைவி அஜ்­மலா, அப்துல் ரஷீத் அப்­துல்லா, இவ­ரது மனைவி ஆயிஷா, இவர்­க­ளது 2 வயது குழந்தை, ஹபீ­சுதீன், மர்வான் இஸ்­மாயில், அஸ்பாக் மஜீத், பிரோஸ், பாலக்­காட்டை சேர்ந்த ஈசா, அவ­ரது மனைவி பாத்­திமா மற்றும் யஹியா, அவ­ரது மனைவி உட்­பட 17 பேர் இலங்கை வழி­யாக சிரியா அல்­லது ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு சென்­றி­ருக்­கலாம் என கூறப்­ப­டு­கி­றது.

இஜாஸின் செல்போன் பேச்சை மத்­திய உள­வுத்­து­றை­யினர் ஒட்டு கேட்­டனர். அதில் அவர் ஐஎஸ் இயக்­கத்தில் சேர்ந்­தது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. கடந்த சில தினங்­க­ளுக்கு முன் இவர், ஆப்­கா­னிஸ்­தானில் இருந்­ததும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது என ஊடக செய்­தி­களில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

கேர­ளாவை சேர்ந்த 17 பேர் ஐஎஸ் தீவி­ர­வாத இயக்­கத்தில் சேர்ந்­துள்­ள­தாக வெளி­வந்­துள்ள தக­வலால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து தீவிர விசாரணை நடத்த இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நேற்று கேரளா வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இவர்கள் காசர்கோட்டிலும் மங்களூரிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மங்களூரில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கும் அமைப்பு செயல்படுவதாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

#Vidivelli

LEAVE A REPLY