வீதி விபத்தில் மாணவன் படுகாயம்: மட்டக்களப்பில் சம்பவம்

0
219

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

aமட்டக்களப்பு முகத்துவார வீதி மற்றும் புகையிரத வீதிச் சந்தியில் நேற்று (11) திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாணவன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளும் திடீரென வீதியின் குறுக்கே பிரவேசித்த வேன் ஒன்று முட்டி மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

மட்டக்களப்பு அம்பிளாந்துறையைச் சேர்ந்த கணேசலிங்கம் பிரதீப் (வயது 21) எனும் உயர்வகுப்பில் கற்கும் மாணவனே படுகாயமடைந்து மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்புப் பொலிஸார் இச்சம்பவம்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

b c

LEAVE A REPLY