அல்ஹம்துலில்லாஹ், ஜாகிரை கைதுசெய்ய எந்த துரும்பும் இல்லை – மகாராஷ்டிரா பொலிஸ்

0
266

zakir_naikஇஸ்லாம் தீவிரவாத மார்க்கம் அல்ல, இந்தியாவிலுள்ள இஸ்லாமிய இயக்கங்களோ அல்லது இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களோ ஒருபோதும் தீவிரவாதத்தை ஆதரித்து கிடையாது என்று நன்கு தெரிந்தும்….

எவனோ ஒரு தீவிரவாதி சொன்னதற்கு இந்தியாவிலுள்ள பிரபல இஸ்லாமிய அறிஞரின் பிரச்சாரத்தை முடக்க நினைத்த பாசிச பாஜக அரசுக்கு இயலாமல் போய்விட்டது. அல்ஹம்துலில்லாஹ்…

மூன்று நாட்களாக தேடியும் ஜாகிர் நாயக் உரையிலிருந்து தீவிரவாதத்திற்கு ஆதரவான எதையும் கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணற விட்டனர்.

பிரிந்து கிடக்கிறார்கள் பிரித்து மேய்ந்து விடலாம் என்று கங்கணம் கட்டிய பாசிச பாஜக அரசின் எண்ணத்தில் இடி தான் விழுந்தது. இந்தியாவிலுள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக களம் இறங்கின. ஆயிரமாயிரம் பிரிவுகள் இருந்தாலும் அல்லாஹு அக்பர் ஒலி கேட்டால் ஒளு செய்து விட்டு ஓரணியில் நிற்கும் சகோதரத்துவத்தை கற்று தந்த மார்க்கத்தில் உள்ளவர்களை பிரித்து மேய்ந்து விடலாம் என்ற எண்ணம் தூள் தூளானது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால்…

தவ்ஹீத் ஜமாஅத்திற்கும், ஜாகிர் நாயக்கிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உண்டு, இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க நினைத்தால் கருத்து வேறுபாடுகளை ஓரம் கட்டி வைத்து விட்டு இஸ்லாத்திற்காக ஓரணியில் திரள்வோம் என்று தவ்ஹீத் ஜமாஅத் போராட்ட களம் அமைத்தது.

மாநிலம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் அறிவித்தது. தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில முஸ்லிம்களும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக குரலும் போராட்ட களமும் அமைத்தனர்.

தற்போது உள்ள நிலவரப்படி ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த வித முகாந்திரமும் இல்லையென்று மகாராஷ்டிரா மாநில காவல்துறை கூறி பின்வாங்கி விட்டது.

நெருப்புக்கே அஞ்சாத சமுதாயம் நரேந்திர மோடியின் வெறுப்புக்கு அஞ்சி விடாது.

Source : Jaffna Muslim

LEAVE A REPLY