சுவையான சத்தான வெஜிடபிள் சூப்

0
196

201607120919041991_how-to-make-vegetable-soup_SECVPFதேவையான பொருட்கள் :

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கேரட் – 1
வெங்காயம் – ஒன்று
உருளைக்கிழங்கு – 1
ஆப்பிள் – 1
உப்பு – தேவைகேற்ப
மிளகு தூள் – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட், உருளைக்கிழங்கு, ஆப்பிளை பொடியாக நறுக்கி தனித்தனியாக வேகவைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் வேகவைத்த கேரட், உருளைக்கிழங்கு, ஆப்பிளை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும்.

* ஆறியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

* பின், அரைத்த விழுதுடன் சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி உப்பு, மிளகு தூள் சேர்த்து ஒரு கப்பில் ஊற்றி பரிமாறவும்.

* சுவையான வெஜிடபிள் சூப் ரெடி.

LEAVE A REPLY