மொகமது ஷமியின் காயத்திற்கு காரணமாக இருந்ததால் 2.20 கோடி ரூபாய் வழங்கிய பி.சி.சி.ஐ.

0
97

201607112215072876_Mohammed-Shami-Gets-Rs-2-2-Crore-for-Loss-of-Pay-in-IPL-2015_SECVPFஇந்திய அணியின் நம்பிக்கைக்குரிய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் முகமது ஷமி. இவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடினார். அந்த தொடரில் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

இந்த தொடருக்கு முன் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் லேசாக இருந்தபோதே அவர் அணியில் இருந்து விலகி இருக்க இந்தியா விரும்பவில்லை. இதனால் தொடர்ந்து விளையாட வைக்கப்பட்டார்.

இதனால் அவரது காயம் வீரியத்தன்மையடைந்தது. அத்துடன் அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு சுமார் ஒரு வருடம் ஓய்வில் இருக்க வேண்டியதாயிற்று.

இதனால் அவர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் இடம்பெறவில்லை. அவரை காயத்துடன் தொடர்ந்து விளையாட வைத்ததால்தான் ஐ.பி.எல். தொடரில் இடம்பிடிக்க முடியவில்லை என்று பி.சி.சி.ஐ. நினைத்தது. இதனால் அவருக்கு 2 கோடியே 23 லட்சத்து 12 ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் இழப்பீடாக வழங்கியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் பி.சி.சி.ஐ. செலவழிக்கும் பணம் குறித்து அதன் வெப்சைட்டில் செய்தி வெளியிடப்படும். இதில்தான் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY