அமெரிக்க கோர்ட்டில் கைதி திடீர் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

0
133

201607121049053786_Two-bailiffs-suspect-dead-in-Michigan-courthouse-shooting_SECVPFஅமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் வடபகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் நகரில் உள்ள பெரியன் கவுன்ட்டி கோர்ட் வளாகத்தில் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒருகைதி திடீரென்று அங்கிருந்த காவலரின் துப்பாக்கியை பறித்து கண்மூடித்தனமாக சுட்டார்.

நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இரு அதிகாரிகள் பலியாகினர். அங்கிருந்த பெரியன் கவுன்ட்டி துணை ஷெரிப் குண்டு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். காவலர்கள்மீது திடீர் தாக்குதல் நடத்திய கைதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இச்சம்பவத்தில் பொதுமக்களில் சிலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY