கஞ்சாவுடன் கடற்கரை வீதியில் நடமாடிய மூவர் கைது

0
20

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

arrested2கஞ்சாவை தம்வசம் விற்பனைக்காக வைத்துக் கொண்டு வீதியில் நடமாடிய மூவரை திங்கட்கிழமை மாலை (ஜுலை 11, 2016) தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர்கள் இருவரிடமிருந்து தலா 4100 மில்லிகிராம் கஞ்சாவும், மூன்றாவது நபரிடமிருந்து 4000 மில்லிகிராம் கஞ்சாவுமாக மொத்தம் 12200 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் முறையே 20, 22, 23 வயதுகளையுடையவர்கள் என்றும் மூவரும் காத்தான்குடி -6, பரீனாஸ் வீதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நபர்கள் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடற்கரை வீதியில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY