ஸ்மார்ட்போனுடன் உறங்கினால் கண்பார்வை பறிபோகும் அபாயம்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை

0
209

young cell phone addict man sleeping at night in bed while using smartphone for chatting, flirting and sending text message  in internet addiction and mobile abuse concept

லண்டனில் உள்ள மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 வயது பெண் ஒருவர், தனக்கு ஒற்றைக் கண்ணில் தற்காலிக பார்வையிழப்பு அடிக்கடி ஏற்படுவதை மருத்துவர்களிடம் பிரச்சினையாக முன்வைத்தார்.

இதேபோல், 40 வயது பெண்ணும் இதே பிரச்சினைக்காக மருத்துவர்களை அணுகினார். இருவரையும் மருத்துவ ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

அதாவது, இரு பெண்களும் ‘ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ்’ எனப்படும் ‘தற் காலிக பார்வையிழப்பு’ பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

வலது கண்ணில் திடீர் பார்வையிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்களிடம் கூறிய 20 வயது பெண், தினமும் இரவில் தூங்கும்போது படுத்தபடியே இடதுபக்கம் சாய்ந்து, வலது கண்ணால் ஸ்மார்ட்போன் ஸ்கி ரீனை தொடர்ச்சியாக பார்த்துள் ளார். அந்த சமயங்களில் இவரின் இடது கண் தலையணையில் புதைந்திருக்கும். 40 வயதைக் கடந்த மற்றொருவர், தினமும் சூரிய உதயத்துக்கு முன்பே, விழித்து, படுத்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்திகளை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்த பழக்கத்தின் காரண மாகவே இருவருக்கும் தற்காலிக பார்வையிழப்பு பிரச்சினை ஏற்ப டுவதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர் ஓமர் மஹ்ரூ கூறும்போது, “நல்ல பிரகாசமான சூரிய வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, திடீரென அறைக்குள் நுழையும் போது, சில கணங்களுக்கு கண் குருடானது போல இருக்கும். எந்தளவுக்கு பளீர் வெளிச்சத்தை நேருக்குநேர் நம் விழித்திரை சந்தித்ததோ, அந்தளவுக்கு சாதாரண நிலையில் குருட்டுத் தன்மை நீடிக்கும்.

ஸ்மார்ட்போனின் பிரகாசமான ஸ்கிரீனை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் வரும் போது, சாதாரண வெளிச்சத்தில் காட்சிகள் தெளிவாக தெரியாது. சில கணங்களுக்குப் பின் இது சரியாகி கண் பார்வை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

இதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தால் நிரந்தர குருட்டுத் தன்மைக்கும் இட்டுச்செல்லும்” என்றார். அண்மையில் நடத்தப் பட்ட மற்றொரு ஆய்வில், பெற் றோரில் 27% பேரும், குழந்தை களில் 50% பேரும் ‘மொபைல் போனு’க்கு அடிமையானவர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY