வீட்டு கூரை விழுந்ததில் மாணவி காயம்: வாழைச்சேனையில் சம்பவம்

0
324

(வாழைச்சேனை நிருபர்)

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை பகுதியில் இன்று வீசிய கடும் காற்றினால் புதிதாக கட்டப்பட்ட மாடி வீட்டின் மேல் சுவர் விழுந்ததில் அருகில் இருந்த வீட்டு மேல் கூரை உடைந்து விழுந்ததன் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் காயமடைந்துள்ள சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணியளில் இடம் பெற்றுள்ளது.

வாழைச்சேனை ஹைராத் வீதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாடி வீட்டின் இரண்டாவது மாடியின் சுவர் இன்று (10.07.2016) காலை வீசிய காற்றின் காரணமாக அருகில் உள்ள வீட்டின் கூரையின் மீது விழுந்ததில் அவ் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 13 வயதுடைய பாடசாலை மாணவி காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த சிறுமி கேணிநகர் மதீனா வித்தியாலயத்தில் தரம் 08ல் கல்வி கற்கும் அன்வர் ரப்சானி என்பதுடன், இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3b89c008-7d9e-48bb-ab79-dd02b657d322

4b5c8444-b3e5-4943-aa6f-66f582b32c9a

20cc6592-0f74-41da-8236-b083bbf5ed3d

25b1a7fa-cdf3-43a6-a570-32a476cb7e56

220a56e4-8d85-43c4-85c5-506c528e878c

027231dd-c04a-451d-be91-3b29201afb46

d6b02859-1d06-45cb-928f-335e94911534

d837cd77-ed7a-44f0-bba1-0be147a19218

e6fefe7d-4f7d-45f2-b394-7a955e437b15

e8be8138-1fe9-4714-bd09-a92108838fe4

ff5358c1-b550-46dc-9652-4b45821eb851

LEAVE A REPLY