உலக சாதனை வீரர் மெரிட் ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்டார்

0
78

201607110913552539_World-record-player-Aries-Merritt-passed-up-the-opportunity_SECVPFதடகளத்தில் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் உலக சாதனை படைத்திருப்பவர் அமெரிக்க வீரர் அரைஸ் மெரிட். கடந்த 2012-ம் ஆண்டு 110 மீட்டர் தடை ஓட்டத்தில் 12.80 வினாடிகளில் இலக்கை கடந்ததே உலக சாதனையாக உள்ளது.

2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான அரைஸ் மெரிட் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கும் ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க அணித்தேர்வில் சோபிக்க தவறினார். யுஜின் நகரில் நேற்று முன்தினம் நடந்த தகுதி போட்டியில் முதல் 3 இடத்துக்குள் வருபவர் மட்டுமே அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் 13.22 வினாடிகளில் இலக்கை எட்டிய அரைஸ் மெரிட் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால், ஒலிம்பிக் அணியில் இடம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

30 வயதான அரைஸ் மெரிட் கடந்த செப்டம்பர் மாதம், தனது சகோதரியிடம் இருந்து சிறுநீரகத்தை தானமாக பெற்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவரால் போட்டிக்கு முழு அளவில் தயாராக முடியவில்லை. அரைஸ் மெரிட் கூறுகையில், ‘இரண்டு அல்லது 3-வது இடத்திற்கு வந்திருப்பதாக நினைத்தேன். ஆனால் 4-வது இடத்தை பெற்றதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன்’ என்றார்.

LEAVE A REPLY