ஒலிம்பிக்கில் வாய்ப்பை இழந்தார் மரியா ஷரபோவா

0
243

201607111638045164_Sharapova-out-of-Olympics-as-CAS-delays-doping-decision_SECVPFபெண்கள் டென்னிசில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் ரஷியாவின் மரியா ஷரபோவா. இவர் டென்னிஸ் விளையாட்டில் அதிக அளவு சாதிக்காவிட்டாலும் விளம்பரங்கள் மூலம் பணத்தை வாரிக்குவித்து வருகிறார். உலக அளவில் அதிக பணம் சம்பாதிக்கும் வீராங்கனை என்ற பெயரை கடந்த சில வருடங்களாக தக்க வைத்துக்கொண்டிருந்தார்.

இவர் இந்த வருட தொடக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஊக்கமருந்து சோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டது. அந்த மாதிரியில் தடை செய்யப்பட்ட மெல்டோனியம் என்ற மருந்தை பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டது. இதுகுறித்து சர்வதேச டென்னிஸ் பெடரேஷன் ஊக்கமருந்து தடுப்புப்பிரிவு விசாரணை மேற்கொண்டது.

விசாரணையின் முடிவில் ஷரபோவாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து விளையாட்டுக்கான மத்திய தீர்ப்பாயத்தில் ஷரபோவா மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை செப்டம்பர் மாதம் 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தது. இதற்கு ஷரபோவா மற்றும் சர்வதேச டென்னிஸ் பெடரேஷன் ஆகியவை சம்மதம் தெரித்தது. இதனால் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கும் ரியோ ஒலிம்பிக்கில் மரியா ஷரபோவா பங்கேற்க இயலாது.

சர்வதேச டென்னிஸ் பெடரேஷன் தடை விதித்தாலும் ரஷ்யாவின் டென்னிஸ் அணியில் ஷரபோவா இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY