ஈக்வேடரை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: பீதியில் மக்கள் ஓட்டம்

0
106

201607110836323366_Magnitude-6-4-earthquake-strikes-Ecuador-s-northwest-coast_SECVPFஈக்வேடர் நாட்டை உலுக்கிய 6.4 நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் உயிர்பயத்துடன் வீடுகளைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

ஈக்வேடர் நாட்டின் தலைநகரான குவிட்டோவில் இருந்து வடகிழக்கே உள்ள எஸ்மெரால்டஸ் நகரின் அருகே பூமியின் அடியில் சுமார் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நிலநடுக்கத்தின் விளைவாக கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் உயிர்பயத்துடன் வீடுகளைவிட்டு ஓட்டம் பிடித்ததாக அந்த செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

LEAVE A REPLY