நான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சில காலம் கைதியாக இருந்தேன்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

0
139

(விசேட நிருபர்)

Maithiri in Battiஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா 10.7.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு திடீரென விஜயம் செய்து மட்டக்களப்பு சிறைச்சாலையை பார்வையிட்டார்.

1971ம் ஆண்டு காலப்பகுதியில் தான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் சில காலம் கைதியாக இருந்ததாகவும் அந்த சிறைக் கூடத்தை பார்ப்பதற்காகவே மட்டக்களப்பு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்றதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தை (10) ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்து அந்த வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி அதன் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்றார்.

தான் சிறைக் கைதியாக இருந்த சிறைக் கூடத்தை பார்வையிட்டதுடன் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு ஜனாதிபதியொருவர் விஜயம் செய்தமை இதுவே முதற் தடவையாகும்.

மட்டக்களப்பு எனக்கு நன்கு தெரியும் எனவும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 1971ம் ஆண்டில் சிறையில் இருந்திருக்கின்றேன் என தெரிவித்த ஜனாதிபதி அந்தக் காலத்தில் நான் சேகுவரா காரணல்ல. என்னை இங்கு கொண்டு வந்து சிறையில் போட்டு வைத்தார்கள். மட்டக்களப்புக்கு வரும் போதெல்லாம் அந்த நாள் ஞாபகம் வருகின்றது எனவும் மட்டக்கப்பு வெபர் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த வைபவத்தில் ஜனாதிபதி உரையாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY