ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மீது கோபம்: விகாராதிபதி தேரோ ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லை உடைத்தார்

0
148

(விசேட நிருபர்)

7fc6874e-a3e1-4a8a-985c-c170b2b045cfஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மீது கோபம் கொண்ட மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரோ ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கலலை ஞாயிற்றுக்கிழமை (10.6.2016) அடித்து நொறுக்கி அதை உடைத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (10) விஜயம்செய்து பல்வேறு வைபவங்களிலும் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தன்னுடைய மட்டக்களப்பு விஹாரைக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்புவிடுத்தார்.

எனினும், அங்கு வருவதற்கு தனக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்ததையடுத்து இதனால், கோபங்கொண்ட தேரர், தன்னுடைய மட்டக்களப்பு மங்களராமய விஹாரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரைக் கொண்டிருக்கின்ற நினைவுக்கல்லை பெரிய சுத்தியலால் அடித்து நொறுக்கி அதை உடைத்தார்.

தனது மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு ஏற்கனவேயும் ஒரு முறை ஜனாதிபதி வருவதாக கூறி இறுதி நேரத்தில் ஜனாதிபதி வருகை தராமல் ஏமாற்றினார். இந்த விஜயத்தின் போதாவது ஜனாதிபதி எமது விகாரைக்கு வருவார் என எதிர் பார்த்து நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர் மறுத்து விட்டார், இதனால் இந்த வினாரையில் அவரது பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கல் தேவையில்லை என்பதாலேயே உடைத்தேன் என தேரோ தெரிவித்தார்.

6fb29d35-279f-4b1a-a491-f944ea43c6ad

7fc6874e-a3e1-4a8a-985c-c170b2b045cf

291f49d9-3a55-48fe-8097-a6137e8499c4

a8d432fe-dacb-46b4-86f8-7ee8497f1a01

LEAVE A REPLY