ஹோட்டலில் குளிர்பானம் அருந்திய இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்கள் திடீர் சுகயீனம்: கல்லடியில் சம்பவம்

0
782

(விஷேட நிருபர்)

Batticaloa boardகாத்தான்குடி பொலிஸ் பிரிவு – மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ஹோட்டல் விடுதியில் குளிர் பானம் அருந்திய இரண்டு வெளிநாட்டு பெண்கள் திடீர் சுகயீனமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (09) சனிக்கிழமை இரவு குறித்த ஹோட்டல் விடுதிக்குச் சென்ற பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 25 மற்றும் 23 வயதுடைய இரண்டு பெண்களுக்கு அந்த விடுதியில் குளிர்பானம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திடீர் சுகயீனமடைந்த இரண்டு வெளிநாட்டு பெண்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மயக்கமான நிலையில் மட்டக்களப்பு போனதா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை பிற்பகள் காத்தான்குடி பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து காத்தான்குடி பொலிசார் இந்த இரண்டு வெளிநாட்டு பெண்களிடமும் விசாரணைகளை மேற் கொண்டனர்.

இதையடுத்து இவர்களுக்கு குளிர்பானம் வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதுடன் தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இந்த இரண்டு வெளிநாட்டு பெண்களுக்கும் குளிர்பானத்தில் மயக்க மருந்து வழங்கப்பட்டு அவர்களை மயக்க மடையச் செய்து விட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாமென சந்தேகிப்பதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY