சவூதியிலிருந்து நாடு திரும்பவுள்ள ஜாகிர் நாயக்கை கைதுசெய்: சிவசேனா – விமான நிலைய பாதுகாப்பு அதிகரிப்பு

0
303

Sivsena - Zakir Naikஜாகிர் நாயக் மும்பை திரும்பவில்லை, அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

இவர் தற்போது இஸ்லாமிய மத நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சவுதி அரேபியா சென்றுள்ளார். இன்று (11) இந்தியா-மும்பை திரும்புவார் என கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பை விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் மும்பை திரும்பவில்லை. இதற்கிடையே ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை செயலாளர் தன்வீர் ஷாய்க் பேசுகையில், ”அவர்(ஜாகிர் நாயக்) இன்று மும்பை வரமாட்டார் என்பது நிச்சயமானது,” என்று கூறிஉள்ளார்.

ஏன் வரமாட்டார் என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய தன்வீர், நாயக்கின் நிகழ்ச்சிநிரல் உறுதிசெய்யப்படவில்லை. அவர்கள் தொடர்ந்து மாற்றிக் கொண்டு உள்ளனர்,” என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஜாகிர் நாயக் இந்தியா திரும்பியதும் 12-ம் தேதி செய்தியாளர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தன்வீர், “12-ம் தேதி செவ்வாய் கிழமை நடைபெறுவதாக இருந்த ஜாகிர் நாயக் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது,” என்று கூறிஉள்ளார்.

ஜாகீர் நாயக்கை இந்தியா திரும்பிய உடன் கைது செய்ய வேண்டும் என்று பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானின் அசார் மஸ்ஜிதுடன் ஜாகீர் நாயக்கை ஒப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ள சிவசேனா, தனது கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் இது குறித்து விரிவாக கூறியுள்ளதாவது,

“வெளிப்படையாக நஞ்சை கக்கும் வகையில் பேசும் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தலைவர் ஆசார் மசூத் போன்று ஜாகீர் நாயக் போன்ற நபர்களும் அமைதி மற்றும் சமூக பணிகள் என்ற பெயரில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஜாகீர் நாயக் தேசநலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறார். அமைதி என்ற பெயரில் அவர் நடத்திய பாடம் டாக்கா தாக்குதலுக்கு பிறகு வெளிப்பட்டுவிட்டது. அமைதி டிவி என்பது உண்மையில் மதப்பிரச்சாரம் செய்யும் டிவி ஆகும். மத்திய அரசும் மகாராஷ்டிர அரசும் துணிவுடன் செயல்பட்டு இந்த தொலைக்காட்சியுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளையும் முடக்க வேண்டும்.

மத்திய அரசு விரும்பும் போது கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வரட்டும். ஆனால், தற்போதைக்கு உடனடியாக நாயக்கிற்கு நிதி வழங்குபவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனெனில் நாயக்கின் செயல்பாடு இந்தியாவை அழிக்கும் வகையில் உள்ளது. இந்தியாவிற்கு திரும்பியவுடன் ஜாகீர் நாயக்கை கைது செய்ய வேண்டும். அவரை மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் அடைக்கப்பட்டிருந்த அதே சிறையில் அடைக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY