முஸ்லிம் பாடசாலைகள் நாளை ஆரம்பம்

0
190

muslim-schoolரமழான் நோன்­புக்­காக நாட­ளா­விய ரீதியில் மூடப்­பட்ட முஸ்லிம் பாட­சா­லைகள் இரண் டாந் தவணை, இரண்­டாங்­கட்ட கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக மீண்டும் நாளை திறக்­கப்­ப­ட­வுள்­ளன.

அட்­டா­ளைச்­சேனை அர­சினர் ஆசி­ரியர் கலா­சாலை, அட்­டா­ளைச்­சேனை தேசிய கல்­வியியற் கல்­லூரி என்­ப­னவும் நாளைய தினம் திறக்­கப்­ப­ட­வுள்­ளன.

முஸ்லிம் பாட­சா­லை­களுக்கு, ரமழான் மாத நோன்­புக்­காக 2016.06.06 முதல் 2016.07.06 வரை விடு­முறை வழங்­கப்­படும் எனவும், இரண்­டாந்­த­வ­ணையின் இரண்டாம் கட்டம், 2016 ஜூலை 07ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை தொடக்கம் 2016 ஆகஸ்ட் 12ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை வரை (இரு தினங்­களும் உட்­பட) பாட­சாலை நடை­பெறும் எனவும் 2016ஆம் ஆண்டு பாட­சா­லைகள் நடை­பெ­ற­வேண்­டிய தவணை நாட் கள் குறித்து கல்வி அமைச்சு ஏற்­க­னவே வெளி­யிட்­டி­ருந்த சுற்­று­நி­ரு­பத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

எனினும், புனித ரமழான் நோன்பு விடு­மு­றைக்­காக கடந்த ஜூன் மாதம் 03ஆம் திகதி மூடப்­பட்ட அனைத்து முஸ்லிம் பாட­சா­லை­களும் மீண்டும் நாளை 11ஆம் திகதி திங்­கட்­கி­ழ­மையே மீண்டும் திறக்­கப்­ப­ட­வுள்­ளன.

கடந்த 07ஆம் திகதி வியா­ழக்­கி­ழ­மையும், 08ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மையும் முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு வழங்­கப்­பட்ட விஷேட விடு­மு­றைக்­கான, பதில் பாட­சாலை ஆகஸ்ட் 15 மற்றும் 16ஆம் திக­தி­களில் நடாத்­தப்­பட வேண்டும் என கல்­வி­ய­மைச்சின் முஸ்லிம் பாட­சா­லைகள் அபி­வி­ருத்திப் பிரிவு அறி­வித்­துள்­ளது.

இவ்­வி­டயம் தொடர்பில், மாகாண மற்றும் வலயக் கல்விப் கல்விப் பணிப்­பா­ளர்­க­ளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட். தாஜுடீன் தெரிவித்தார்.

LEAVE A REPLY