(Photos) 201 மில்லியன் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வெபர் மைதானம் ஜனாதிபதியினால் திறப்பு

0
39

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC06700மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று (10) ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்பு நகரில் அதமைந்துள்ள புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த வெபர் மைதானத்தை திறந்து வைத்தார்.

இந்த மைதானம் சுமார் 201 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

வெபர் விளையாட்டு மைதானம், சுமார் 10 ஏக்கர் விசாலமான காணியில் உள்ளக அரங்கு, வெளி அரங்கு கொண்ட சகல வசதிகளும் அமைந்த நவீன விளையாட்டு அரங்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

DSC06766இதில், 400 மீற்றர் ஓடுபாதை, நீச்சல் தடாகம், பார்வையாளர் அரங்கு முதலிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், பிரதிமைச்சர் எம்.எஸ்.அமீரலி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், தவிசாளர், பிரதித் தவிசாளர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

DSC06719 DSC06720 DSC06763

LEAVE A REPLY