மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு: ஒர் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உள்பட 15 பேர் பலி

0
184

gun-firing shootingமெக்சிகோவின் வடகிழக்குப்பகுதியில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு, டமாலிபாஸ் தலைநகர் கியுடாட் விக்டோரியா நகரில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் ஆண்கள் எனவும், 6 பேர் பெண்கள் எனவும் மற்றவர்கள் குழந்தைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் நடந்த 45 நிமிடங்களுக்கு பிறகு, மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் ஒரு ஆண் மற்றும் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த நகரங்களிலிருந்துதான் அமெரிக்காவிற்கு அதிகளவில் போதை மருந்து கடத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY