கட்சியை செவ்வன நடாத்தும் ஹக்கீம் – நசீர் பாராட்டு

0
146

(சப்னி அஹமட்)

unnamedஇக்கட்சியின் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபுக்கு பிறகு இக் கட்சியின் தலைமையினை அமைச்சர் றஊப் ஹக்கீம் பாராமெடுத்து முதல் இன்று வரையும் சிறந்த முறையில் இந்த இயக்கத்தை செவ்வென முன்னெடுத்து வழிநடத்தி செயற்படுத்தி வருவதை யாவரும் அறிந்த விடயமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

கலாபூசணம் ஆசுகவி அன்புடின் எழுதிய தொப்புள் கொடியும் தலைப்பாகையும் கவிதை நுால் அறிமுக விழா அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர்பாடசாலை கேட்போர் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹானீபா தலைமையில் நேற்று (09) மாலை நடைபெற்ற போது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இக்கட்சியின் வளர்ச்சியைக் கண்டு தாங்க முடியாத சிலர் வெளிநாட்டுகளில் உள்ள டயேஸ் போராக்கள் நிதிகளை இவர்களுக்கு வழங்கி சதித்திட்டங்களைத் தீட்டி முஸ்லிம்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்காகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையும் இக்கட்சியினையும் அழிப்பதற்கான நடவடிக்கைகளிலும் இக் கட்சியில் இருந்து அதிகாரமற்ற துாரத்திலுள்ள மக்கள் ஆதரவு இல்லாத ஒரு கூட்டத்தினர் செயற்படுட்டு வருவதைக் காணக் கூடியதாக உள்ளது ஒரு தேர்தல் வருகின்ற போது இவர்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகளும் மக்களும் ஏயையவர்களும் தகுந்த படம் புகுட்டுவார்கள் பின்னர் கிழக்கின் எழுச்சி நிறைவடைந்து புஸ்வானமாக மாறிவிடும் என்பதைக் கூறிக் கொள்கின்றேன்.

கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் இந்நாட்டில் சுதந்திரமாக வாழ முடியமால் இருந்து பல்வேறு கொடுமைகளையும் அழிவுகளையும் அனுபவித்தனர் இந்நிலமையினை இல்லாமல் செய்வதற்காக இக்கட்சியின் தலைமையும் முஸ்லிம்களும் ஒன்றினைந்து ஆட்சிமாற்றத்திற்கு உதவி நல்லாட்சியினை கொண்டு வந்த விடயத்தில் முஸ்லிம்களும் பங்காளர் ஆவர். முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைப்பதற்கான கிழக்கின் எழுச்சி என்ற சதித் திட்டத்திற்கு பின்னால் மக்கள் ஒரு போதும் இவர்கள் பின்னால் ஒன்றினையப் போவதில்லை என்பது தெளிவான விடயம்.

கவிஞர் ஆசுகவி அன்புடீன் எங்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிசமாகும் இவரின் பெருமானம் அவரின் மறைவுக்கு பிறகுதான் எல்லோரும் பேசுவார்கள் எல்லோருக்கும் பலவழிகளில் உதவி செய்து வரும் இக்கவிஞரை பாராட்டுவதில் பெருமையடைவதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் அமைச்சர் நஸீர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீன் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் யூ.எம்.வாஹிட் கவிஞர் அஷ்ஷெக் முபாறக் அப்துல் மஜீத் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பொதுசனத் தொடர்பு அதிகாரி எம்.ஐ.எம்.நயீம் போராசிரியர் றமீஸ் அப்துல்லா சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.ஹனீஸ் உதவிக் கல்விப் பணிப்பாளர் மௌலவி யூ.எம்.நியாஸி உட்பட அரசியல் பிரமுகர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் உத்தியோகத்தரகள் புத்திஜீவிகள் கவிஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY