(Photos) காத்தான்குயில் மோட்டார் சைக்கிள் விபத்து பெண் உட்பட நான்கு பேர் காயம்

0
37

(விஷேட நிருபர், முகம்மது பயாஸ்)

DSCN7323மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று(10.7.2016) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி கடற்கரை வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதில் காத்தான்குடியைச் சேர்ந்த எஸ்.மாஜிதா(40) மற்றும் எம்.இல்ஹாம்,(17)(எம்.உவைஸ்(17)எம்.ஐ.அஸ்னாத்(21) ஆகிய நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பெண் உட்பட மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் ஒருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

DSCN7324 WhatsApp-Image-20160710 (1) WhatsApp-Image-20160710 (2) WhatsApp-Image-20160710 (4) WhatsApp-Image-20160710 (5) WhatsApp-Image-20160710

LEAVE A REPLY