(Full Photos) மட்டக்களப்பு புதிய விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

1
150

(விஷேட நிருபர்)

DSCN7309மட்டக்களப்பு விமான நிலையத்தில் 1143 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு புதிய விமான நிலையம் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு கொழும்பிலிருந்து எம்ஏ.60 எனும் விமானத்தில் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, மட்டக்களப்பு விமான நிலையத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தினை திறந்து வைத்தார்.

இந்த வைபவத்தில் இராஜாங்க எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாதுகாப்பு பிரதியமைச்சர் றொசான் விஜேவர்த்தன, மற்றும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ.வியாழேந்திரன், சி.யோகேஸ்பரன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா உட்பட அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கோடீஸ்வரன், மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்களான கே.துரைராஜசிங்கம், திருமதி ஆரியவதி கலபதி உட்பட விமானப்படை தளபதி எயர் மாஸல் ஜி.பி.குளத்சிங்கல, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Batti Airport New Buildingமட்டக்களப்பு விமனா நிலைய புனரமைப்புக்கான நிதியினை இலங்கை விமனாப்படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு வழங்கியதுடன் இதன் ஓடு பாதை புனமைப்புக்கான நிதியினை வீதி அபிவிருத்தி அதிகார சபை வழங்கியிருந்தது.

நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டகளப்பு விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பு கொழும்பு விமானப் போக்கு வரத்துக்கான எம்ஏ.60 எனும் புதிய விமானமும் சேவையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இதற்கான புதிய விமானமும் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு விமான நிலையத்தின் விமான ஓடு பாதை 560 மீற்றராக விஸ்தரிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் அமர்ந்திருந்து சிறப்பாக பயணத்தினை மேற்கொள்ளவசதியாக இருக்கைகள் போடப்பட்டு நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSCN7267 DSCN7283 DSCN7284_1 DSCN7300 DSCN7303 DSCN7308 DSCN7313 DSCN7315 MA60 Flight 1 MA60 Flight 2 MA60 Flight 3 MA60 Flight 4 MA60 Flight 5 MA60 Flight

1 COMMENT

  1. ஒழுங்காக தமிழ் படித்து விட்டு செய்தி எழுத வர வேண்டும்..நிறைய வசனப்பிழைகள்.Zajil news கூட இதனைத் திருத்த வில்லை

LEAVE A REPLY