(Photo) வீதி விபத்தில் அறபுக் கல்லூரி மாணவனுக்கு கால் முறிந்து படுகாயம்: ஏறாவூரில் சம்பவம்

0
49

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

cஏறாவூர், புன்னக்குடா வீதியில் நேற்று (09) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் அறபுக் கல்லூரி மாணவன் ஒருவன் கால் முறிந்த நிலையில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலொன்னறுவை மாவட்டம் அத்துல்கல கிராமத்தைச் சேர்ந்த முஹம்மத் அஸ்ஹர் (வயது 21) என்ற இந்த மாணவன் நோன்புப் பெருநாள் விடுமுறையில் ஏறாவூரிலுள்ள தனது நண்பனைச் சந்திப்பதற்காக ஏறாவூருக்கு வந்திறங்கி வீதியில் நடக்கும்போது வேகக்கட்டுப்பாடின்றி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த மாணவன் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

a b

LEAVE A REPLY