பிரிட்டன் விரைவாக வெளியேற வேண்டும்: ஐரோப்பிய ஆணையம்

0
183

2ஐரோப்பிய யூனியன் – பிரிட்டன் இடையிலான பிரிவு சுமுகமானதாக இருக்காது என்றாலும், அது விரைவாக நிகழ விரும்புவதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜான்-கிளாட் ஜங்கர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் ஜெர்மன் வானெலியில் வெள்ளிக்கிழமை இரவு கூறியதாவது:

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் என்று பொதுவாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பளித்த பின்னரும் அதன் செயலாக்கத்தை அக்டோபர் மாதம் வரை பிரிட்டன் தள்ளி வைத்துள்ளது ஏன் என்று புரியவில்லை.

இந்தப் பிரிவினை சுமுகமானதாக இருக்கப்போவதில்லை. இருந்தாலும், அது அதிக வலியை ஏற்படுத்தாமல் மிகத் துரிதமாக நிகழ்ந்துவிட வேண்டும் என்பதே என் விருப்பம்.”பிரெக்ஸிட்’டுக்கு ஆதரவாக பிரிட்டன் மக்கள் வாக்களித்த நாள் ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் மிக மோசமான நாள் என்றார் அவர்.

பிரிட்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரிட்டன் மக்கள் வாக்களித்தனர். இந்த முடிவு வெள்ளிக்கிழமை வெளியானதையடுத்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வரும் அக்டோபர் மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பொறுப்பேற்கவிருக்கும் புதிய பிரதமர், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார் எனவும் கேமரூன் கூறினார்.

LEAVE A REPLY