விம்பிள்டன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்

0
151

201607092121205710_Serena-Williams-wins-seventh-Wimbledon_SECVPFகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தன்னை எதிர்த்து விளையாடிய ஏஞ்செலிக் கெர்பரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்த போட்டி 81 நிமிடங்கள் நீடித்தது. இதில் ஜெர்மனியை சேர்ந்த கெர்பரை 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி செரீனா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இது அவரது 22வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும். கடந்த வருடம் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்று அவர் 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார்.

அதன்பின் இன்று நடந்த போட்டியில் வெற்றி பெற்றதனால் ஸ்டெபி கிராபின் சாதனையை செரீனா வில்லியம்ஸ் சமன் செய்துள்ளார். செரீனாவின் 7வது விம்பிள்டன் பட்டம் இதுவாகும்.

LEAVE A REPLY