அவதூறு பரப்பும் மீடியாக்களுக்கு ஜாகிர் நாயக் பகிரங்க சவால்….!!

0
612

zakir naikஜாகிர் நாயக்கிற்கு எதிராக அவதூறு பரப்பும் மீடியாக்களுக்கு ஜாகிர் நாயக் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது…

பங்களாதேஷில் நடந்த தாக்குதலுக்கு நான் தான் காரணம் என்றும் எனது பேச்சால் தான் அவ்வாறு நடந்தது என பங்களாதேஷ் அரசு தெரிவித்திருப்பதாக ஒரேயொரு ஆதாரப்பூர்வமான செய்தியை கொண்டு வாருங்கள் பார்ப்போம்.

பங்களாதேஷ் அரசு அதிகாரிகளுடன் நான் தொடர்பு கொண்டு பேசினேன், அதற்கு அவர்கள் உங்கள் மீது இதுப்போன்ற குற்றச்சாட்டை எங்கள் நாட்டின் அரசு வைக்கவில்லை, இது இந்திய மீடியாக்கள் வெளியிட்டுள்ள பொய்யான செய்தி என்று தெரிவித்தார்கள்.

பங்களாதேஷில் நடந்த தாக்குதலுக்கு நான் தான் காரணம் என்று ஒரேயொரு ஆதாரம் தர முடியுமா என்று இந்திய மீடியாக்களுக்கு ஜாகிர் நாயக் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

மேலும் ஜாகிர் நாயக்கின் இந்த பேச்சை உறுதிப்படுத்தும் விதமாக பங்களாதேஷ் அரசு இன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் பங்களாதேஷின் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் அவர்கள் இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் இதோ : http://www.bbc.com/news/world-asia-36462026

சம்பந்தபட்ட அரசே ஒன்றும் சொல்லதா நிலையில் வரிந்து கட்டிக் கொண்டு பிஜேபி அரசும், மீடியாக்களும் முனைப்பு காட்டுவது ஏன் ?

முஸ்லிம்களுக்கு இந்தியாவில் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு காரணம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

-நன்றி முகநூல் முஸ்லிம் மீடியா-

LEAVE A REPLY