இந்தோனீஷியாவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய 12 பேர் பலி

0
92

160708095756_indon_2925205h (1)இந்தோனீஷியாவில் ஏற்பட்ட பெரும் போக்குவரத்து நெரிசலால் மில்லியன் கணக்கான மக்கள் பல நாட்களாக சிக்கி இருந்ததன் விளைவாக நீர்ப்போக்கு மற்றும் சோர்வு காரணமாக 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ரம்லான் புனித மாதத்தின் நிறைவை குறிக்கும் விதமாக பொதுமக்கள் கூட்டமாக சென்ற போது, ஜாவா தீவில் இருந்த போக்குவரத்து சந்திப்பு ஒன்றில் அதிகளவில் குவிந்தனர்.

கடந்த மூன்று தினங்களாக இந்த உயிரிழப்புகள் நடந்து வந்ததாக இந்தோனீஷிய போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என்றும், சூடான வாகனங்களில் தவித்த போது இறந்திருக்கலாம் என்றும் இந்தோனீஷிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்களிலிருந்து வெளியேறிய புகை ஒரு பெண் குழந்தைக்கு விஷமாக மாறியதால் அவர் உயிரிழந்தார்.

LEAVE A REPLY