(Highlights) யூரோ கிண்ணம்: ஜெர்மனியை வீழ்த்தியது பிரான்ஸ்; போரத்துக்கள்ளுடன் இன்று இறுதிப்போட்டி

0
26

euro 2016கிண்ண இறுதிச்சுற்றுக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் அந்த அணி, நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனியைத் தோற்கடித்தது.

பிரான்ஸின் மார்சீலி நகரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில், பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், முதல் பாதியில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஜெர்மனியின் ஸ்வெய்ன்ஸ்டீகர் செய்த தவறால் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி ஆண்டாய்ன் கிரீய்ஸ்மேன் முதல் கோலை அடித்தார். முதல் பாதியில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தினாலும் அதனால் கோல் அடிக்க முடியாமல் போனது. 72ஆவது நிமிடத்தில், கிரீய்ஸ்மேன் மற்றொரு கோலை அடித்து பிரான்ஸின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இறுதியில் 2 – 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது.

https://www.youtube.com/watch?v=q_0Xd6AVlOU

வரும் 10ஆம் திகதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் பிரான்ஸ், போர்த்துக்கல்லைச் சந்திக்கவுள்ளது.

பிரான்ஸ் அணி இதற்கு முன்னர் சொந்த மண்ணில் நடந்த இரு யூரோ கிண்ண போட்டிகளிலும் (1984, 1998) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதனால் இறுதிச்சுற்றில் அந்த அணியே வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டு ரசிகர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY